‘அடடே’ பவுனுக்கு ரூ.69,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை; இனியும் தொடருமா?

கிட்டதட்ட ரூ.800 உயர்வு!

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.195-உம், பவுனுக்கு ரூ.1,560-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்…

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,610-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்…

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.68,880 ஆகும். சர்வ தேச அளவில், தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் விளைவாக, இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. உலக அளவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் அல்லது அறிவிப்புகள், பொருளாதார மாற்றங்களை பொறுத்து இனி தங்கம் விலை ஏறுமா… இறங்குமா என்பது அமையும்.

ஒரு கிராம் வெள்ளி…

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.108-க்கு விற்பனை ஆகி வருகிறது.