முடக்கப்பட்ட ‘The Wire’ இணையதள பக்கம் – செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

‘The Wire’ இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

“அன்பிற்குரிய ‘தி வயர்’ வாசகர்களுக்கு,

இந்திய அரசியலமைப்பு வழங்கிய பத்திரிகை சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறும் வகையில், இந்திய அரசு இந்தியா முழுவதும் thewire.in வலைதளத்தை முடக்கியுள்ளது.

இதுகுறித்து இணைய சேவை வழங்குநர்கள், “ஐடி சட்டம் 2000-ன் கீழ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின்படி, ‘தி வயர்’ முடக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

இந்தியாவின் மிக முக்கியமான தருணத்தில் செய்யப்பட்ட இந்தத் தணிக்கைக்கு எதிராக போராடுவோம்.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்த நகர்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

கடந்த 10 ஆண்டுகளாக, எங்களுடைய பணிக்கு நீங்கள் ஆதரவு வழங்கி வருகிறீர்கள். இந்த நேரத்தில் நாம் அனைவரும் இணைந்து நிற்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் உண்மையான மற்றும் துல்லியமான செய்திகளை எங்கள் வாசகர்களுக்கு வழங்குவதில் இருந்து பின்வாங்கமாட்டோம்.

சத்யமேவ் ஜெயதே”.

‘ஏன் மத்திய அரசு இந்த வலைதளத்தை முடக்கியது?’ என்ற காரணம் இதுவரை வெளிப்படையாக மத்திய அரசோ, தி வயர் நிறுவனமோ தெரிவிக்கவில்லை.