கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (மே 7) ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.
இந்தத் திட்டம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் நடத்தப்பட்டது. இதற்கு “தக்க பதிலடி” கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று முதல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் ஏவுகணைகளை ஏவி வருகிறது. இவற்றை இந்திய ராணுவம் தனது ஆயுதங்கள் மூலம் தகர்த்து வருகிறது.

இந்தியக் கடற்படை…
பாகிஸ்தானின் தாக்குதல்களை மேலும் எதிர்கொள்ள, இந்தியக் கடற்படை அரேபியக் கடலில் களமிறங்கியுள்ளது. தற்போது இந்தியக் கடற்படை அரேபியக் கடலில் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்தைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தத் தாக்குதலை இந்தியா பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தின் மீது நடத்தியது என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் விரைவில் சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.