Live: தீவிரமடையும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்… ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் மூடல்!

ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் மூடல்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மே 9, 10 தேதிகளில் செயல்படாது” என அரசு அறிவித்திருக்கிறது.

3 மணிநேரத்துக்கு முன்பாக விமான நிலையங்களுக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் சம்பவங்கள் வலுவடையும் நிலையில், விமான பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையங்களுக்கு வந்து பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு விமான சேவை நிறுவனங்கள் அறிவுறுத்தல்.

“உயிரிழப்புகள் எதுவும் இல்லை” – மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதலை நடத்திவருகிறது. அங்கிருந்து வரும் ட்ரோன்கள், விமானங்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம்,  S-400 சுதர்சன் சக்ரா என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், “ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகள் பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் குறிவைக்கப்பட்டன. இருப்பினும் Standard Operating Procedures (SOPs) மூலம் அவை முறியடிக்கப்பட்டன.

உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டகாக எதுவும் பதிவாகவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையாகத் தயாராக உள்ளது.” என்று பதிவிட்டிருக்கிறது.

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்திவருகிறது.

பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட F-16 விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்த பாகிஸ்தான் விமானி ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பிடிபட்டிருக்கிறார்.