காட்பாடி: புதிய சாலையைச் சேதப்படுத்திய கோயில் விழாக்குழு; கொதிக்கும் மக்கள்; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழிஞ்சூர் பகுதியில், கோயில் திருவிழாவையொட்டி மே 2-ம் தேதி மாடு விடும் விழா நடைபெறவிருக்கிறது.

இந்த ஒருநாள் விழாவுக்காக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பிரதான தார்ச்சாலையின் இருபுறமும் நீண்டதூரத்துக்குக் குழிகளைத் தோண்டி தடுப்பு அரண்களை அமைத்து வருகிறார்கள் விழாக் குழுவினர்.

காளைகள் ஓடுபாதைக்காக இந்த பிரதான தார்ச்சாலையைத் தயார்ப்படுத்தி வருவது, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலையின் இருபுறங்களையும் ஒட்டியபடி வீடுகளும் அமைந்திருக்கின்றன.

சேதப்படுத்தப்பட்ட புதிய தார்ச்சாலை

சாலையோரம் மண்பாதையும் கிடையாது. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் போடப்பட்ட தார்ச்சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து இருபுறமும் கடப்பாரையால் குழிகளைத் தோண்டி சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த விழாவை ஊருக்கு வெளியே பொதுவெளியில் நடத்தியிருக்கலாம். யாருக்கும் இடையூறு ஏற்பட்டிருக்காது.

தார்ச்சாலையும் சேதப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இப்போதே கம்புகள் நடப்பட்டுத் தடுப்புகள் கட்டப்பட்டுவிட்டதால் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ச்சாலையைச் சேதப்படுத்திய விழாக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs