நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.

அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் மற்றும் விகாஷ் ஆகியோருடன் சேகர் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார்.

நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சசிதரன் மற்றும் விகாஷ் ஆகிய இருவரும் வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மகன்களின் அலறல் சத்தம் கேட்ட தாய் அனிதா அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

இதனை தொடர்ந்து வாய்க்காலில் குதித்த சேகர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்களையும் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார்.

தேடுதல்

நீரின் வேகம் அதிகம் இருந்ததால் சேகரால், கரையேற முடியாமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவிநாசிபாளையம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர் .

தீயணைப்பு அலுவலர் முத்துக்குமாரசுவாமி தலைமையிலான தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட சேகரின் உடலைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel