‘மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி…’ – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

கடந்த மாதம் மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார்.

திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு அடைந்திருக்கக்கூடிய உயரத்தின் அளவையும், சாதனைகளையும் இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு பட்டியலிட்டு சொல்ல விரும்புகிறேன் என்று பேச தொடங்கிய ஸ்டாலின், “2024- 2025 ஆண்டில் இந்தியாவில் நம்பர் 1 ஆக தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தது கிடையாது. இதனை நான் சொல்லவில்லை.  எல்லா வகையிலும் தமிழ்நாட்டிற்கு என்றால் ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது.

உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்போர் 1.43 சதவிகிதம் மட்டுமே. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளையும் தாண்டி, சாதனை படைத்து வருகிறோம்.

இது தனிமனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. சுயமரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை என அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலம் என்ற நிலைக்கு உழைக்கிறோம்.

ஸ்டாலின் கேட்கும் 3 கேள்விகள்
ஸ்டாலின் கேட்கும் 3 கேள்விகள்

என் 60 ஆண்டுகால பொதுவாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் முன்னதாக கூறியிருந்தார். கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ எனக் கூறியிருப்பார்.

கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன். கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்” என்று  பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs