“கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்” – செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளைச் செந்தில் பாலாஜி நேற்று (ஏப்ரல் 27) காலை பார்வையிட்டார்.

அப்போது, கரூர் – திருச்சி மாவட்டங்களை இணைக்கும் காவிரி ஆற்றைக் கடந்து செல்ல, நெரூர்- உன்னியூர் இடையே உயர்மட்ட பாலம் சுமார் ரூ. 92 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி,

“தற்போது நெரூர் – உன்னியூர் இடையே கட்டப்படும் பாலம் ரூ.92 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று, தற்போது 90 சதவிகித பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மீதமுள்ள 10 சதவிகிதம் வேலையும் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து தமிழக முதல்வர் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும். இந்த பாலம் எனது கனவுத் திட்டம்.

மேலும், நெரூரில் ஒரு தடுப்பணையும், குளித்தலை தாலுகா, மருதூரில் ஒரு தடுப்பணையும் ரூ.780 கோடி மதிப்பில் கட்டப்பட அறிவிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

senthil balaji
senthil balaji

அதனைத் தொடர்ந்து, அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அறிவிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கரூரில் ரிங் ரோட்டைப் பொறுத்தவரைக் கோவை ரோடு தண்ணீர்ப் பந்தல் பகுதியிலிருந்து தொடங்கி, ஈரோடு ரோடு, குட்டக் கடை வழியாக மாங்காசோலிப்பாளையம், மண்மங்கலம், வாங்கல் சாலை வழியாக சோமூர் 16 கால் மண்டபத்தில் பிரிந்து கோயம்பள்ளி மேலப்பாளையம் பாலம் வழியாகப் பொதுமக்கள் எளிதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல சிறப்பு வாய்ந்த திட்டம் விரைவில் நான்கு கட்டமாகப் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY