Pahalgam: “தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்” – இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேசியது என்ன?

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

28 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தூதர்களை வெளியேற்றவும், விசாக்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது இந்தியா.

காஷ்மீர்
காஷ்மீர்

இந்திய அரசால் சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டது. பதிலுக்குப் பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வானில் பறக்க அந்நாடு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினேன். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்காக எனது மற்றும் இஸ்ரேல் மக்களின் இரங்கலைத் தெரிவித்தேன்.

Netanyahu
Netanyahu

இந்தியாவுடன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காகப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அத்துடன், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு நாடுகளும் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஆசியாவை – சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் வழியாக – ஐரோப்பியக் கண்டத்துடன் இணைக்கும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வழித்தட முன்முயற்சியை முன்னேற்றுவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” என்று பகிர்ந்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk