“காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்” – திருமாவளவன் விமர்சனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன், பிரதமர் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லாமல் தேர்தல் பரப்புரைக்கு சென்றதாக விமர்சித்துள்ளார்.

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… அரசியலுக்காக கூறவில்லை” – திருமாவளவன்

இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “காஷ்மீரில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.

அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தைத் தடுக்க இந்திய ஒன்றிய அரசோடு துணை நிற்க வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Modi
Modi

அதேவேளையில், காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிந்துவிட்டது, ஜனநாயகம் தலைத்தோங்குகிறது, தாக்குதல்கள் நடைபெறாது, அமைதி நிலவுகிறது, சுற்றுலா பயணிகள் காஷ்மீர் செல்லலாம் என்றெல்லாம் அமித் ஷா உறுதியளித்தார்.

அரசியலைமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்கிவிட்டு ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக உடைத்துவிட்டு, ‘அமைதியை நிலைநாட்டிவிட்டோம், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்துவிட்டோம்’ என்றெல்லாம் அமித் ஷா புளகாங்கிதம் அடைந்தார்.

ஆனால் அதற்கு பிறகுதான் இத்தகைய கொடூர நிகழ்வு நடந்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அவர்களே, இந்திய அரசின் உளவுத்துறை, பாதுகாப்புத்துறை தோல்வி அடைந்திருக்கிறது. உள்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரலெழுப்பியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த துயரத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது அரசியல் நோக்கத்தில் சொல்லப்படும் கருத்தல்ல, நாட்டை பாதுகாப்பை முன்னிறுத்தி முன்வைக்கப்படும் கருத்து.

“தீவிரவாதிகள் தாக்குதலை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் மோடி” – Thirumavalavan

“பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துவிட்டு வேக வேகமாக நாடு திரும்பினார். சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட இடத்தைப் பார்வையிடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் பீகார் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

Amit shah
Amit shah

உள்துறை அமைச்சர் மட்டுமல்லாமல் பிரதமரும் அங்கு சென்றிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் இந்த தாக்குதலை பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கக் கூடிய கசப்பான உண்மையாக இருக்கிறது.” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel