Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின், சவுதி அரேபியாவின் அரசு பயணத்திலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி.

இன்று காலை அவர் இந்தியா திரும்பியதும் புது டெல்லி விமான நிலையத்திலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் உடனடி சந்திப்பு நடத்தினார்.

அவர் சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றப்போது, நேற்று அவரது போயிங் 777 விமானம் பாகிஸ்தான் வழியாக தான் அந்த நாட்டிற்குச் சென்றது.

மோடி
மோடி

ஆனால், ஜம்மு காஷ்மீரின் தாக்குதலுக்கு பிறகு, சவுதி அரேபியாவில் இருந்து பாதியிலேயே திரும்பியப்போது அவர் பாகிஸ்தான் வான்வழி தடத்தை தவிர்த்துவிட்டு குஜராத் வழியாக டெல்லிக்கு திரும்பி உள்ளார்.

தி ரெசிஸ்டன்ட் ஃபிரன்ட்டின் இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என்ற தகவல் காரணமாகத் தான் பிரதமர் மோடி பாகிஸ்தான் வழித்தடத்தை தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால், ‘எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel