Pahalgam Attack: ‘உளவுத்துறையின் தோல்வி இது; மோடி அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்..’ – அசாதுதின் ஓவைசி

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட  தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக இந்திய ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் அனந்த்நாக், பஹல்காம், பைஸ்ரான் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன.

Pahalgam Attack
Pahalgam Attack

இந்நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் (AIMIM) தலைவரும் ஹைதராபாத்  எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி ‘பஹல்காம் தாக்குதல் இந்திய உளவுத்துறையின் தோல்விதான்’ என்று கூறியிருக்கிறார். தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், “ இது ஒரு வேதனையான சம்பவம்.

பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கண்மூடித்தனமாகக் கொன்றிருக்கின்றனர். இந்த காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்விதான். நரேந்திர மோடி அரசு தங்களின் பயங்கரவாதத் தடுப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். உரி, புல்வாமா தாக்குதல்களை  விட இந்தத் தாக்குதல் அதிக கண்டனத்திற்குரியது.

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

ஏனெனில் அண்டை நாட்டில் இருந்து வந்த பயங்கரவாத கும்பல் குடிமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து தாக்கி இருக்கின்றனர். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs