யாரும் இதுவரை பார்த்திராத ஒரு புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கண்களில் லேசர் துடிப்புகள் செலுத்தி இந்த புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டுமே விழித்திரை லேசர் மூலம் புதிய நிறத்தை பார்த்துள்ளனர்.
சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிட்ட தகவலின் படி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நிறத்தை ஓலோ (OLO) என்று அழைக்கின்றனர். இந்த நிறம் நீல – பச்சை, ஒரு வகையான மயில் நீலம் போன்று இருப்பதாக விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, “நான் பார்க்கும் நிறம் வெறும் நிறமல்ல, அது ஒரு பதிப்பு. இந்த நிறத்தை இதற்கு முன்பு யாரும் கண்டிருக்க மாட்டார்கள். மானிட்டர்களில் இந்த நிறத்தை வெளிப்படுத்த எந்த வழியும் இல்லை.
இந்த புதிய நிறமான ஓலோவின் அனுபவத்தை விழித்திரையில் மட்டுமே கையாள முடியும். எந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களிலோ அல்லது டிவிகளிலோ புதிய நிறமான ஓலோவைப் பார்க்கப் போவதில்லை.
மேலும் இது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் தொழில்நுட்பத்திற்கு மிக மிக அப்பாற்பட்டது” என்று புதிய நிறம் பார்த்த அனுபவம் குறித்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.