சென்னை: பள்ளி சத்துணவு மையங்களில் பெண்களுக்கு `சமையல் உதவியாளர்’ பணி; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சமையல் உதவியாளர்.

இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரருக்கு தமிழில் சரளமாக பேச, எழுதப், படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.

Chennai Corporation- Application-Cook Assistant.pdf இந்த லிங்கை கிளிக் செய்து, இருக்கும் விண்ணப்பத்தை நகல் எடுத்து பூர்த்தி செய்து “கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை / சத்துணவுப்பிரிவு, அம்மா மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை – 600 003” என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்துடன், கீழே கூறப்பட்டுள்ள ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள்?
என்னென்ன ஆவணங்கள்?

மொத்த காலிபணியிடங்கள்: 179

சம்பளம்: முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000; அதற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.3,000 – 9,000 வரை மாறுபடும்.

வயது வரம்பு: 21 – 40 (சிலருக்கு தளர்வுகள் உண்டு)

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: ஏப்ரல் 30, 2025.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.