Travel Contest : `கற்பனைக்கு அப்பாற்பட்ட இடம்’ – எதிர்பாரா இன்பத்தை கொடுத்த தென் அமெரிக்க பயணம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பொதுவாக தொலைதூர வெளிநாட்டு பயணங்களை கவனத்துடன் திட்டமிடுவதாலும், முன்னேற்பாடுகளாலும் இனிய விடுமுறைகளாக அனுபவிக்க இயலும்.

எனினும் சில சமயங்களில் இயற்கை நிகழ்வுகளால், திட்டங்களெல்லாம் தலைகீழாக மாறும் சூழல் உருவாகக்கூடும். ஆனால் அந்த சூழலே எதிர்பாராத, திட்டமிடாத பயண நல்வாய்ப்பு ஒன்றை போனஸாக வழங்குகையில், அதை `Blessing in disguise’ என்றுதான் கொண்டாடத் தோன்றும்.

அண்டார்ட்டிக்கா கண்டத்தின் அருகாமையில் உள்ள தென் அமெரிக்காவின் கடைகோடி பகுதியான Perito Moreno எனும் இடத்தில் Lake Argentino ஏரியின் 250 சதுர மைல்கள் அளவிலான பனிப்பாறைகளைக்( Glaciers) காண்பதற்காக, 6 நாட்கள் பயணமாக அர்ஜெண்டினா நாட்டில் உள்ள El Calafate என்ற அழகிய சின்னஞ்சிறு ஊரில் நானும், என் தோழியும் தங்கினோம்.

கம்பீரமான `Andes’ மலைத்தொடரின் பனிச்சிகரங்களை மேற்கு எல்லைகளாக கொண்ட இந்த Los Glaciers National Park-ன் அடர் கானகங்களும், அவற்றின் இலையுதிர்கால கண்கவர் நிறங்களும், பனிப்பாறைகளாக ( Glaciers) உறைந்து கிடக்கும் ஏரியும், ப்யோர்டுகளும் (fjords) நிறைந்த, மனித நடமாட்டமற்ற அந்த அமைதியான இடங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட எழில் கொஞ்சுபவை.

அந்த மௌனத்தை, திடீரென பெரும் இடியின் ஓசை போன்ற சப்தத்தை எழுப்பியவாறு செங்குத்தாக பிளவுபட்டு உடையும் 70 meter (230 feet) உயரமான பனிப்பாறைகளின் விளிம்புகள் நம்மை மிரள வைத்திடும்.

இந்த பனிப்பாறைகள் கடைசி ice ageல் (சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு) உருவானவை என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

6 நாட்களாக நீடித்த இந்த அற்புத உணர்வுடன், எங்கள் பயணத்தின் அடுத்த இலக்கான 7 உலக அதிசயங்களில் ஒன்றான Peru நாட்டில் உள்ள மச்சுபிச்சு (Maachu Pichu) போவதற்காக El Calafate விமான நிலையத்தை அடைந்தோம்.

ஆனால் அன்று வீசிய கடும் பனிப்புயல் ( blizzard) காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தொலைதொடர்பு வசதிகள் எதுவும் இயங்கவில்லை. எனவே எங்கள் அடுத்த கட்ட பயண திட்டத்தை தள்ளிப்போடுவது கடினமாக இருந்தது.

எனவே, விமான நிலைய அதிகாரிகளின் ஆலோசனைப்படி, சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக்கடல் பகுதியில் உள்ள Rio Gallegos என்ற விமான நிலயத்துக்கு சாலை மார்க்கமாக செல்வது என முடிவு எடுத்தோம்.

அந்த சாலைப் பயணம்தான் நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி தந்தது.

ஆம், தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய, மற்றும் உலகின் எட்டாவது பெரிய பாலைவனமான Patagonia பாலைவனத்தின் குறுக்கே பயணித்துதான் Rio Gallegosஐ அடைய முடியும்.

சுமார்2.5 இலட்ச சதுர மைல் பரப்பளவில் கடல்மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் இருக்கும் இந்த பாலைவனத்தில் Steppe மற்றும் Pampas எனப்படும் மரங்களற்ற சமதள புல்வெளிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இதன் சிவந்த நிற மணல் மேடுகளும்(Sand dunes) அந்திவானமும் , சூரிய அஸ்தமன நேரத்தில் மாறும் நிறங்களால் kaleidoscopeல் பார்ப்பது போன்று கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

Glacier park

மேலும்,இந்த வறண்ட பாலைவனத்தின் உயரத்தில் இருந்து கீழே தெரியும் பசுமையும், வெண்மையும் கலந்த கானகங்கள் நிறைந்த Glacier parkஐ பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். அந்த நிமிடம் இதைத் தந்த பனிப்புயலுக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

Rio Gallegosல் இருந்து எங்கள் பயணம் திட்டமிட்டபடி தொடர்ந்தது.

ஒரு பாலைவன பயணத்தை மட்டுமே விடுமுறைக்காக திட்டமிட்டு செல்வதில் எங்களுக்கு உவப்பு கிடையாது . ஆனால் பாலைவனத்தின் ஊடே பயணம் செய்யக் கிடைத்த இந்த வாய்ப்பு எதிர்பாராத ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளித்தது என்று சொல்லலாம்

இந்த பயணத்தில் நான் கற்றதும் பெற்றதும் ‘Make best of a bad bargain’ என்ற ஆங்கில பழமொழியின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்டதுதான்.

அரசி சுப்ரமணியம்

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.