பரந்தூர் விமான நிலையம்; க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு… விவரம் என்ன?!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது.

இதற்காக பரந்தூரில் 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒருபுறம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருக்கும் இடம்
பரந்தூர் விமான நிலையம் அமையவிருக்கும் இடம்

இருந்தாலும் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்ட அனுமதிக்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது.

இதனை பரிசீலித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்ட அனுமதிக்குக் கொள்கை அளவிலான ஒப்புதலைத் தற்போது வழங்கி இருக்கிறது.

இடத்திற்கான அனுமதி ஏற்கெனவே கிடைத்த நிலையில் தற்போது திட்டத்திற்கான ஒப்புதலும் கிடைத்திருப்பதால், அரசு விரைவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம்

அடுத்த ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டால், 2028-ஆம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs