
நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.
என்ன சொல்கிறார் நிபுணர்?

உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது… இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை குறையும் என்று கூறியுள்ளார்.
அவர், “அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்” என்று கணித்துள்ளார்.
இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.
தங்கம் விலை இன்னும் ஏறுமா… இறங்குமா? உங்களுடைய கருத்து என்ன மக்களே?