சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன்.

மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்போது அவரது அறிவுறுத்தல்களைக் கேட்டு, கவனமாகச் செயல்பட்டு மருத்துவ உதவியாளர் வரும்வரை தாய் சேய் நலத்தைக் காத்துள்ளார்.

Pregnancy

விவேகத்துடன் செயல்பட்ட சிறுவன்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 13 வயது சிறுவன் அவசர மையத்துக்குக் கால் செய்து கர்ப்பமாக இருக்கும் தனது தாய்க்குப் பனிக்குடம் உடைந்துவிட்டதாகவும், அவர் அதீத வலியில் துடிப்பதாகவும் கூறியுள்ளார்.

சிறுவனுக்குப் பதிலளித்த சென் சாயோஷுன் என்ற மருத்துவ உதவியாளரிடம், தன்னால் ஏற்கெனவே குழந்தையின் தலையைப் பார்க்க முடிவதாகவும், அம்மாவின் நலன் கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவசரமாக ஆம்பூலன்ஸில் சென்றபடி, சிறுவனுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் சென். அம்மாவை அமைதிப்படுத்துமாறும் பிரசவத்துக்கு உதவுமாறும் கூறியுள்ளார்.

Ambulance

மருத்துவ உதவியாளர் கூறிய அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றி ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளார். ஆனால் தொப்புள் கொடியை வெட்டச் சுத்தமான கயிறோ ஷூ லேஸோ சிறுவனுக்குக் கிடைக்கவில்லை.

விரைவாகச் சிந்தித்து, மருத்துவ உதவியாளர் ஆலோசனையுடன் முககவசத்தில் இருக்கும் கயிற்றைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் தொற்று ஏற்படுவதும் அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதும் தடுக்கப்பட்டது.

மருத்துவ உதவியாளர் வந்த உடனேயே தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

சீன சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவி, பரவலான பாராட்டைப் பெற்றான் அந்தச் சிறுவன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX