Ukrain – Russia: “ட்ரம்ப் எந்த அழுத்தத்திலும் இல்லை..” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புகழாரம்!

ரஷ்யா போர் நிறுத்த விதிமுறைகளை மீறினால், அதே வழியில் உக்ரைன் பதிலளிக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி 28 அன்று, கனிம ஒப்பந்தம் மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக் குறித்து அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி “ட்ரம்ப் மீது கோபமில்லை. அந்த விவாதத்தை அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்” எனப் பேசியிருந்தார்.

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ட்ரம்ப் உக்ரைனுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு அது உதவியாக இருக்கும். ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியபோது, தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து விவாதித்திருக்கிறேன்.

அந்த அணுமின் நிலையம் மீண்டும் உக்ரைனிடம் வழங்கப்பட்டால், அதை நவீனமயமாக்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் அமெரிக்காவின் நிலைபாடு குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்தியிருகிறோம். ரஷ்யாவுடனான வான்வழித் தாக்குதல்களை விரைவாக நிறுத்த முடியும். ரஷ்யா போர் நிறுத்த விதிமுறைகளை மீறினால், உக்ரைன் அதே வழியில் பதிலளிக்கும். அதிபர் ட்ரம்ப்பின் நேர்மறையான பேச்சுவார்த்தைகள், அவர் எந்த அழுத்தத்திலும் இல்லை என்பதை பறைசாற்றுகிறது” என்றார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks