EPFO 3.0: “வருங்கால வைப்புநிதி பணத்தை இனி ATMலேயே எடுக்கலாம்” – மத்திய அமைச்சர் சொல்வதென்ன?

தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியை (EPFO) ஏடிஎம்-களில் எடுக்கும் அம்சம் அமல்படுத்தவிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கானா மண்டல அலுவலகத்தின் EPFO ​​அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்த பிறகு பேசிய அவர், “மத்திய அரசு விரைவில் EPFO ​​3.0 பதிப்பை அறிமுகப்படுத்தும். இது சந்தாதாரர்கள் ஏடிஎம்களிலிருந்தே வைப்பு நிதியை எடுப்பதற்கு அனுமதிக்கும். அதாவது ‘EPFO 3.0 பதிப்பு’ வங்கி அமைப்புக்குச் சமமானதாக இருக்கும்.

Provident Fund

ஒரு வங்கியில் பரிவர்த்தனைகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறதோ, அது போல, உங்களிடம் இருக்கும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம், எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடியும். நீங்கள் EPFO ​​அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. முதலாளியிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது உங்கள் பணம். நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை எடுக்கலாம். மேலும் பல புதிய அம்சங்களும் அதன் மூலம் நடைமுறைக்கு வரும். தற்போது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், EPFO சில சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு வருகிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel