‘தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை’ – அண்ணாமலை புது விளக்கம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் நேற்று பேசும்போது அதிமுக என்று எங்கேயும் சொல்லவில்லை. தொலைக்காட்சியில் வேலை இல்லாதவர்களை வைத்து விவாதம் நடத்துவதற்கு நாங்கள் சொன்னதை திரிக்க வேண்டாம்.

அண்ணாமலை

நானும், எடப்பாடி அண்ணனும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளோம். நான் அதிமுக தவம் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை.

பாஜகவின் நிலைப்பாட்டை தான் சொல்லி இருக்கிறேன். அதிமுகவைப் பற்றி எடப்பாடி அண்ணன் பேசியிருக்கிறார். விவாத நிகழ்ச்சியில் அமர்பவர்கள் பாஜகவுக்கு எதிராக இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அவர்களுக்கு கள நிலவரம் தெரியவில்லை. இந்த மாதிரி கூட்டணி வர வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் முடிவு செய்கின்றனர். இதற்கு நானும் எடப்பாடியாரும் எப்படி பேச முடியும்.” என்று கூறினார்.

முன்னதாக அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ‘எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டும் தான் கூட்டணி.’ என்று கூறியுள்ளாரே.” என கேள்வி எழுப்பினர்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பாஜக தீண்ட தகாத கட்சி.. நோட்டா கட்சி.. அவர்களுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தோல்வியடைந்தோம். என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel