சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் 6:20 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு தொகுதிக்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளை அழைத்து வருமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகள் YMCA மைதானத்தில் கூடியிருந்தனர். மேலும், இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளிலிருந்தும் இஸ்லாமியர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மாலை 5:15 மணியளவில் நிகழ்வுக்கு வந்த விஜய், இஃப்தார் விருந்தையும் தொழுகையையும் முடித்துக் கொண்டு 6:45 மணியளவில் கிளம்பினார். நிகழ்வில் கூடியிருந்த இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய விஜய்,



