TVK Vijay: தவெக-வின் இஃப்தார் விருந்து… தலையில் தொப்பியுடன் வந்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. கடந்த இரண்டு நாள்களாக அதற்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

விஜய்
விஜய்

குறிப்பாக, கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 இஸ்லாமியர்களை அழைத்து வருமாறு மா.செக்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கான பாஸ் விநியோகம் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டு வந்தன. மேலும், மசூதி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் த.வெ.க தலைவர் விஜய், இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ மைதான திடலுக்கு வெள்ளை உடையில் தலையில் தொப்பியுடன் வந்தார்.

இவரோடு, இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களின் முறைப்படி அனைவரும் தொழுகை செய்து வருகின்றனர்.