ரூ.6 கோடி வரி ஏய்ப்பு – சிக்கிய பொள்ளாச்சி நகைக்கடை உரிமையாளர்!

கோவை மாவட்டம், தங்க நகை உற்பத்திக்கு பிரபலமானது. பல தங்க நகை உற்பத்தியாளர்கள் நகைகளை உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், ஏராளமான நகைக்கடைகளும் உள்ளன.

நகை

இதில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அங்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் அவ்வபோது சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வசமாக சிக்கியுள்ளது.

இதுகுறித்து கோவை ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மொத்த, சில்லறை நகைக்கடைகளில் கடந்த பிப்ரவரி மாதம்1-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை சோதனைகள் நடத்தப்பட்டன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான ரசீது செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதற்காக அவர்கள் இரண்டு வகையான மென்பொருளை  பயன்படுத்தியுள்ளனர்.

ரூ.217 கோடி (305 கிலோ) மதிப்பிலான தங்க நகை வணிகத்தில் ரூ.6.53 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத 31கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டது.” என்று கூறியுள்ளனர்.

பாண்டுரங்கன்

இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட பிஎஸ்பி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன் என்பவரை கைது செய்துள்ளனர். அவருக்கு வருகிற 10-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel