இன்று தங்கம் விலை இரண்டாவது முறையாக ஏறியுள்ளது. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விலை மாற்றம் என்பது எப்போதாவது தான் நடக்கும்… அதுவும் எதாவது முக்கியமான விஷயம் நடக்கும்போது தான்.
உதாரணத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் ஆன அன்று இரண்டு முறை தங்கம் விலை ஏறியது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது. இப்போது இன்று தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,065-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.64,520-க்கும் விற்பனை அனது. கிட்டதட்ட 10 நாட்களுக்கு பிறகு, தங்கம் விலை ரூ.64,500-ஐ தாண்டியது.

இன்று காலை 9.30 மணியளவில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,020 ஆகவும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,160 ஆகவும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், இப்போது 12.30 மணியளவில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,060-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததே இந்த விலை மாற்றத்திற்கான முக்கிய காரணம் ஆகும்.