ஜேசிபி வாகனத்தை இயக்கி கார், ஆட்டோ, பைக் என் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து நொறுக்கிய சிறுவனின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி நள்ளிரவு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தை இயக்கி எடுத்து 17 வயதான சிறுவன், செல்லூர் ஐம்பது அடி சாலையிலிருந்து கண்மாய்கரை செல்லும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலையோரமும் வீட்டின் முன்பும் நிறுத்தப்பட்டிருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், பைக்குகள் என 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கியதில் வாகனங்கள் முழுவதும் சேதமடைந்தன.
அது மட்டுமின்றி இரும்புக் கடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி ஜேசிபி அருகில் வருவதைப் பார்த்து நூலிழையில் உயிர் தப்பினார். கட்டடங்கள், மரம், தடுப்புவேலிகள் எனச் சேதப்படுத்திக் கொண்டு செல்ல, அப்பகுதி மக்கள் ஜேசிபியை துரத்திக் கொண்டு சென்றனர். பின்பு காவல்துறையினர் வந்து ஜேசிபியை நிறுத்தி அச்சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

மதுரையில் சிறார்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
