`அனைத்துக் கட்சி கூட்டம் … ஆகாத கூட்டம்’
தென்காசியில் நடந்து வரும் கனிமவள கொள்ளையை கண்டித்து நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைத்துக் கட்சி கூட்டம் என்பது ஒரு ஆகாத கூட்டம். அதில் பங்கேற்கும் ஒவ்வொரு கட்சியின் மொழிக் கொள்கை, நிலைப்பாடு என்ன? எத்தனை காலத்திற்கு எங்களை ஏமாற்றுகிறீர்கள்.

காங்கிரஸின் மொழிக் கொள்கை என்ன? மும்மொழி கொள்கையை ஏற்கிறதா? இல்லையா? என தெளிவுபடுத்த வேண்டும். தொகுதி சீரமைப்பு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்னுடைய தொகுதி இளையான்குடி. எனது சொந்தத் தொகுதியை மானாமதுரையுடன் சேர்த்து தனித்தொகுதி ஆக்கி நாங்கள் போட்டியிடவே முடியாத படி செய்து வீட்டிர்கள். புதுக்கோட்டை ஒரு மாவட்டம் அங்கு ஒரு நாடாளுமன்றம் உள்ளதா? இது சீரமைப்பா சீரழிப்பா? மனசான்றுபடி நீங்கள் பேச வேண்டும்.
`திமுக கொண்டு வந்த இல்லம் தேடி கல்வியில் புதிய கல்விக் கொள்கை உள்ளது. ’
புதுக்கோட்டைக்கு என்று ஒரு நாடாளுமன்றத் தொகுதி அந்த மாவட்டத்திற்கு உள்ளதா? திருச்சியுடன் சேர்த்து விட்டீர்கள். அதில் பாதி, இதில் பாதி என உள்ளது. இந்த பிரச்னையை இப்போது கொண்டு வரவில்லை. அப்போதே உள்ளது. நீங்கள் பேசி முடிவு எடுத்து இருக்க வேண்டும்.. தேர்தல் வரும்போது நீங்கள் பேசுகிறீர்கள். தேர்தல் வரும் போது மும்மொழிக் கொள்கை எதிர்க்கிறேன் என்கின்றீர்கள். திமுக கொண்டு வந்த இல்லம் தேடி கல்வியில் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு என ஒரு சங்கம் உள்ளது. அங்கு இந்தியில் பேசிக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். எத்தனை காலத்திற்கு எங்களை ஏமாற்றுகிறீர்கள். மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்கிறார்கள். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கட்டடத்திற்கு வெளியே பதாகைகளை வைத்து தூக்கி கொண்டிருப்பது வேடிக்கையாக இல்லையா? நீதித் தலைவர்களே நிதி தரவில்லை என்று கூறுவது ஒரு அதிகாரமா?
இதற்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்களா?” என்றவரிடம், நடிகை ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த நடிகை எனக்கு முன்னால் 4 பேருடன் இவ்வாறு செய்து வந்தால் அந்த வேலைக்குப் பெயர் என்ன சொல்வீர்கள். முதலில் பழகுவது அதன் பின்னர் வழக்கு தொடுப்பது, வம்படியாக மிரட்டி பணம் கேட்பது என்றால் எப்படி? அதிகபட்சமாக அவர் வைத்த கோரிக்கை மாதம் ரூ.30,000 கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை அவர் சொன்னாரா இல்லையா என அவரிடம் கேளுங்கள்.

கண்ணியம் காத்து நானும் வாயை மூடினேன். ஆனால், தற்போது இது ஒரு முடிவுக்கு வந்துவிட்டதல்லவா. என்னை காதலித்தேன் என்கிறார். ஒவ்வொருவரையும் இடைமறித்து, இடைமறித்து பணம் பறிப்பதற்கு பெயர் என்ன சொல்வீர்கள். இதற்கு பெயர் என்ன வைப்பீர்கள்? பாலியல் குற்றவாளி என்று என்னை சொல்வதற்கு பாலியல் தொழிலாளியை நான் எப்படி ஏற்க முடியும். மானங்கெட்ட நீங்கள் இப்படி பேசினால் தன்மானத்துக்காக போராடும் மகன் நான் எவ்வாறு பேசுவேன். மானத்துக்காக உயிரை விட்ட இனத்தில் வந்தவன் நான். இதற்கு முன்னால் சந்தித்த ஆள் வேறு, இனி சந்திக்கப் போகிற ஆள் வேறு” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
