திருச்சியில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சிக்கு வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“சீமான் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை சட்டபூர்வமாக எடுத்த நடவடிக்கை தான். அதில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை.

இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுபோம் என்பதை முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு தேவையான நிதியை கேட்க வேண்டும். அப்படி கேட்டால், பிரதமர் தாயுள்ளத்தோடு நிதியைத் தருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.ம.மு.க கலந்து கொள்ளும். மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை… விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது மொழியைக் கற்று கொள்ளத்தான் என்று கூறியுள்ளார்கள்” என்றார்.