சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது: 34). இவரிடம் திருவெறும்பூர் நொச்சிவயல் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அறிமுகமாகி, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைப்பது மாதிரி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதோடு, வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக, ரூ. 3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்று சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய கிருஷ்ணவேணி சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குக்கு ரூ. 3.50 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வெளிநாட்டில் வேலையும் வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் சண்முகசுந்தரம் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து, கிருஷ்ணவேணி உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.