திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும்; இல்லைன்னா பணிநீக்கம் – சர்ச்சை கண்டிஷனை திரும்ப பெற்ற நிறுவனம்

டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறிய ஒரு சீன நிறுவனம், அந்த ரூல்ஸை திரும்ப பெற்றதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாண்டாங்கில் உள்ள `ஷுன்டியன் கெமிக்கல் குரூப் கோ லிமிடெட்’ என்ற நிறுவனம், 28 முதல் 58 வயதுடைய திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்ற ஊழியர்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் `திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டுமென்று’ மே மாதம் அறிவுறுத்தியது.

மார்ச் மாதத்திற்குள் அவ்வாறு செய்ய தவறும் ஊழியர்கள், அது தொடர்பான விளக்க கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேலும் செப்டம்பர் மாதத்துக்குள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியிருந்தது.

பணி நீக்கம் (Dismissal)

திருமண விகிதங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை கொண்ட இந்த விதிமுறைகள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து உள்ளூர் மனித வளம் மற்றும் சமூக பாதுகாப்பு பணியகம் பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வை நடத்தியது. அது பின்னர் அந்த நிறுவனம் ஓரிரு நாட்களுக்குள் அந்த கொள்கையை திரும்ப பெற்றதாகவும் திருமணம் செய்யவில்லை என்பதை காரணமாக காட்டி பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அந்நிறுவனமும் தாங்கள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை மற்றும் விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel