TVK: “நம்ம பாசிசமும், பாயசமும் பேசி வைத்துக்கொண்டு… Its very Wrong Bro!” – விஜய் உரை

விஜய்யின், தமிழிக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர், கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு விருந்தினராகத் தேர்தல் வியூக வகுப்பாளருமான பீகார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் பேசியதைத்தொடர்ந்து இறுதியாகப் பேசிய விஜய்…

தவெக - விஜய்
தவெக – விஜய்

விரைவில் பூத் கமிட்டி மாநாடு!

மக்களின் நலனைப் பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சியைப் பற்றியோ என எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்தெந்த வழிகளில் பணம் வரும் என்று… இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை. அதை ஜனநாயக முறைப்படி செய்வதற்குத்தான் 2026 தேர்தலை நாம் சந்திக்க போகிறோம்.

அந்தத் தேர்தலைச் சந்திக்க நமக்கு முக்கியமான விஷயம் பூத் லெவல் ஏஜென்ட்ஸ். அது ரொம்ப முக்கியம். ஏனென்றால், தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளுக்குத்தான் அந்த பூத் லெவல் ஏஜென்ட்ஸ் வலிமையாக இருக்கும் என்று சொல்வார்கள். தோராயமாக, 69,000 பூத் இருக்கிறது. அது எல்லாவற்றுக்கும், நம்முடைய கட்சித் தோழர்களைத்தான் பூத் லெவல் ஏஜென்ட்ஸ்களாக நியமிக்கப் போகிறோம். கூடிய சீக்கிரம் பூத் கமிட்டி மாநாடு நடத்த போகிறோம். தமிழக வெற்றி கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது இல்லை என்று அன்றைக்குத் தெரியும். தமிழக வெற்றி கழகம் முதன்மை சக்தியாக பலமாக இருக்கிறது என்று அன்று நிரூபணமாகும்.

தவெக - விஜய்
தவெக – விஜய்

மும்மொழிக் கொள்கையில் நம் பாசிசமும், பாயசமும் பேசி வைத்துக்கொண்டு…

இப்போது புதிதாக மும்மொழிக் கொள்கை என்று பிரச்னையை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை நம் மாநில அரசுக்கு தர மாட்டார்களாம். இது எல்.கே.ஜி, யு.கே.ஜி பசங்க சண்டை போட்டுக் கொள்வது மாதிரி இருக்கிறது. கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை, வாங்க வேண்டியது இங்கே இருப்பவர்களுடைய உரிமை. இந்த சீரியஸான பிரச்னையில் பாசிசமும், நம்ம பாயாசமும், நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும், பேசி வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ!

இவர்கள் அடித்துக் கொள்வது மாதிரி அடித்துக் கொள்வார்களாம், அதை நாம் நம்ப வேண்டுமாம். வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ… இதற்கு நடுவில் நம்ம பசங்க TVK FOR TN என்று சம்பவம் பண்ணிவிட்டு வெளியே வந்து விடுவது. இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயம் இல்லை. இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று அவர்களுக்கே புரியும். நம்ம ஊர் சுயமரியாதை ஊர்… எல்லோரையும் மதிப்போம். ஆனால், சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

தவெக - விஜய்
தவெக – விஜய்

வேறு மொழியை அரசியல் ரீதியாகத் திணித்தால்…

எந்த மொழி வேண்டுமோ, எப்போது தோன்றுகிறதோ, எப்போது கற்றுக்கொள்ள வேண்டுமா கற்றுக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த பள்ளிக்கூடத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேற ஒரு மொழியை வலுக்கட்டாயமாக, அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ… அதனால் இந்த பொய் பிரசாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நாம் உறுதியாக எதிர்ப்போம். நம்பிக்கையாக இருங்கள் வெற்றி நிச்சயம்.” என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel