TVK Vijay: 2ம் ஆண்டு தொடக்க விழா `மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்?’ – வெளியான தகவல்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைகிறது. இரண்டாம் ஆண்டின் தொடக்கவிழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று காலை நடைபெறுகிறது. விழுப்புரம் மாநாட்டுக்குப் பிறகு விஜய் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் என்பதால் அரசியல் வட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மூன்றாயிரம் தவெக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜயை சந்தித்துச் சென்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கவிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும், இந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டு உரையாற்றுவார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொள்ள முடியும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. நேற்றிரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில், இன்றைய விழாவில் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள் குறித்து, விஜய் – பிரசாந்த் கிஷோர் – கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மூவரும் ஆலோசித்திருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel