சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தினமும் காலை முதல் மாலை வரை இலக்கிய நிகழ்வுகளும், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

நடனம் ஆடியபோது

அதன்படி, கடந்த 22 ஆம் தேதி மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த முருகையா மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 53) என்பவர் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

விழாக்குழுவினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ்கண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ராஜேஷ் கண்ணன்

புத்தகத் திருவிழாவில் நடனக் கலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Vikatan Whatsapp Channel

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel