Israel: ஹமாஸ் வீரருக்கு முத்தம் கொடுக்க காரணம் இதுதான் – இஸ்ரேல் பிணைக்கைதி சொல்வது என்ன?

ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிப்ரவரி 22 அன்று 6 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒமர் ஷெம் தொவ் என்ற ஒரு நபர் இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 500 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒமர், இரண்டு ஹமாஸ் வீரர்களை மேடையில் முத்தமிட்டுள்ளார். மேலும் கூட்டத்தினரை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

வீடு திரும்பிய பிறகு ஒமரிடம் ஹமாஸ் வீரர்களை முத்தமிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் அவ்வாறு செய்ய வற்புறுத்தி அழுத்தம் கொடுத்ததால் அதைச் செய்ததாகக் கூறியுள்ளார்.

ஷெம் தொவ்வின் அப்பாவும், “அவர்கள் என் மகனை அருகாமையிலிருந்த காவலாளியை முத்தமிடவும் கூட்டத்தை நோக்கிக் கையசைக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

கன் டிவி செய்தியாளரிடம் அவர் அளித்த பேட்டியில், “அவர்கள் அவ்வாறு வேண்டும் என்று அவனிடம் கூறியுள்ளனர். வீடியோவில் என்ன செய்ய வேண்டுமென்று ஒருவர் அவனிடம் விளக்குவதைக் காண முடியும்” எனக் கூறியுள்ளார்.

அக்டோபர் 7, 2023ல் 250 பேர் ஹமாஸால் பிணைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஷேம் தேவும் ஒருவர்.

Vikatan Whatsapp Channel

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel