அமெரிக்கா வாஷிங்டன்னில் நடந்த மாநாட்டில் (Conservative Political Action Conference (CAPC)) ஆன்லைனில் கலந்துகொண்டார் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி.
அந்த மாநாட்டில் மெலோனி, “அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றி இடதுசாரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வலதுசாரிகள் கைகோர்ப்பதால் இடதுசாரிகளின் கோபம் ஹிஸ்டிரியாவாக மாறி வருகிறது. 1990-களில் பில் கிளின்டனும் (முன்னாள் அமெரிக்க அதிபர்), டோனி பிளேயர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்) இணைந்து உலக அளவிலான இடதுசாரி விடுதலை நெட்வொர்க்கை உருவாக்கியப்போது, அவர்களை ‘அரசியல்வாதிகள்’ என்று கூறினார்கள்.

ஆனால், இப்போது நான், ட்ரம்ப், ஜேவியர் மைலி (அர்ஜென்டீனா அதிபர்) அல்லது மோடி பேசினால், அது ‘ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்’ என்று கூறுகிறார்கள். இப்படி இடதுசாரிகள் இரண்டு நிலையாக பேசுவது எங்களுக்கு பழகிவிட்டது.
அனைத்திலும் நல்ல விஷயம் என்னவென்றால், என்ன தான் இவர்கள் எங்கள் மீது சேறு அள்ளி வீசினாலும், மக்கள் அவர்களை நம்பப்போவதில்லை என்பது நல்ல செய்தி.
நாங்கள் சுதந்திரத்தை பாதுகாக்கிறோம். நாங்கள் தேசத்தை நேசிக்கிறோம். பாதுகாப்பான எல்லைகள் எங்களுக்கு வேண்டும். இடதுசாரிகளிடம் இருந்து வர்த்தகத்தையும், குடிமக்களையும் நாங்கள் பாதுகாக்கிறோம். குடும்ப வாழ்க்கையை நாங்கள் பாதுகாக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
