‘தினமும் சமைக்கிறோம், ஆனா?’ – அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டாரில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண்கள்

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 13-வது இடமாக வட சென்னையில் கொளத்தூர் பௌர்ணமி மஹாலில் நடைபெற்று வருகிறது. போட்டியை தொடங்கி வைத்த நடுவர் செஃப் தீனா, ‘எதற்காக இந்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்க விரும்பினீர்கள்’ என்று கேட்டதற்கு பெரும்பாலான போட்டியாளர்கள், “தினமும் சமைக்கிறோம், ஆனால் வீட்டில் எங்களுக்கு அங்கீகாரம் இல்ல. எங்களோட சமையலுக்கு அங்கீகாரம் தேடி வந்திருக்கோம்” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

சுண்டக்காய் துவையல், கரண்டி ஆம்லெட், பான் ஸ்வீட், மகாராஷ்டிரா ஸ்பெஷல் கத்தியவாடி தஹி திக்கரி, கர்நாடகா ஸ்பெஷல் பிசிபேளாபாத், தாய்லாந்து தாய் மியாங்கும்,

காஷ்மீர் ப்யாஸ் சஃப்ரானி புலாவ், கறுப்பு கவுனி அரிசி புட்டு லட்டு, பனங்கிழங்கு அ ல்வா, கற்றாழை பாயாசம், முங்கார் அரிசி கேழ்வரகு களி, ஸ்வீட் போட்டேட்டோ சீஸ் கேக், மக்கானா கீர், பீட்ரூட் பபிள் டீ என காஷ்மீர் முதல் காண்டினெண்டல் வரை சமைத்து அசத்ததியிருந்தனர்.

முதல் கட்ட போட்டியாளர்கள் சமைத்த உணவின் தரம், சுவை, செய்முறையை பார்த்து ருசித்து மதிப்பெண் வழங்கி கொண்டிருக்கிறார் செஃப் தீனா. இவர்களிலிருந்து 10 பேர் அடுத்த கட்ட நேரடி சமையல் போட்டியில் களம் காண்பர்கள். 

அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.