Vikatan Cartoon: இதுவரை விகடனில் வெளியான கார்ட்டூன்களில் சில உங்கள் பார்வைக்கு!

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. என்றைக்குமே குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டுமே ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ விகடன் செயல்பட்டதில்லை. சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக பொதுமக்களின் பக்கம் நின்று, அறத்தின் குரலாக எந்தவித விருப்பு வெறுப்பின்றி பல கார்ட்டூன்களை வெளியிட்டிருக்கிறோம். அந்த கார்ட்டூன்களில் சில இதோ! தற்போது www.anandavikatan.com என்ற தளத்தின் வழியே விகடன் செயல்பட்டு வருகிறது.

1942 – பிரிட்டனின் ஏகாதிபத்திய ஆட்சியை விமர்சித்து
1984 – எதிர்க்கட்சி ஆட்சிகளைக் கவிழ்த்த பிரதமர் இந்திரா
1985 – டா சட்டம் மூலம் எதிர்க்கட்சிகளையும், சமூக
ஆர்வலர்களையும் ராஜீவ் காந்தி அரசு அச்சுறுத்தியது
1990 – வி.பி.சிங்கின் தேசிய முன்னணி ஆட்சியில் கூட்டணிக் கலகங்கள்
1993 – பிரதமர் நரசிம்ம ராவ் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மோசடி பங்குத்தரகர் ஹர்ஷத் மேத்தா குற்றச்சாட்டு
1996 – சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெ.
2007 – தன் குடும்பத்தின் அடுத்த வாரிசாக கனிமொழியை
எம்.பி ஆக்க டெல்லி பயணம் மேற்கொண்ட கருணாநிதி
2007 – ஜனாதிபதியாக ஒரு பொம்மையைத் தேர்வு செய்வதில் மாமியாரும் மருமகளும் ஒரே மாதிரி
2010 – எதிர்க்கட்சித் தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கிய மன்மோகன் சிங் அரசு
2013 – டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தபோது!
2013 – ராகுல் காந்தி தலைமைப் பதவிக்குத் தயார் செய்யப்பட்ட காலம்
2013 – மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
2013 – ஈழத்தமிழர் பிரச்னையைத் துண்டுபோல அணுகும் கருணாநிதி
2013 மின்வெட்டு சமயத்தில்
2015 வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது முதல்வர் ஜெயலலிதா என்ன செய்தார்?
2015 ஜெயலலிதா ஆட்சியின் போது
2018 பெட்ரோல் விலை உயர்வின் போது
2022 – ம் ஆண்டு பெட்ரோல் விலை உயர்வு குறித்து