”இந்தியாவே நமது மக்களுக்கு நேர்ந்த அவமதிப்பைக் கண்டு கொந்தளித்தது. அப்போது வராத கோபம், இந்திய மக்கள் விலங்குகள் போல் நடத்தப்பட்டபோது வராத கோபம் அதைக் கேலிச்சித்திரமாக விகடன் வெளியிடும்போது மட்டும் ஏன் வரவேண்டும்?” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில்,
“ஒன்றிய அரசு விகடன் இணைய தளத்தை முடக்கியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. நமது இந்திய மக்களை விலங்குகளைப் போல, கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்க அரசைக் கேள்வி கேட்கத் துணிச்சல் இல்லாமல், நாடாளுமன்றத்தில் அந்த அவமானகரமான செயலை மோடி அரசு நியாயப்படுத்தியது. இந்தியாவே நமது மக்களுக்கு நேர்ந்த அவமதிப்பைக் கண்டு கொந்தளித்தது.

அப்போது வராத கோபம், இந்திய மக்கள் விலங்குகள் போல் நடத்தப்பட்டபோது வராத கோபம், அதைக் கேலிச்சித்திரமாக விகடன் வெளியிடும்போது மட்டும் ஏன் வரவேண்டும்? இது ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள நேரடியான தாக்குதல். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக ஒன்றிய அரசு விகடன் இணைய தளம் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்னையை வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play