Stalin : ‘உங்களின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள்!’ – மத்திய அமைச்சருக்கு முதல்வர் பதில்

‘தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும். மற்ற மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாட்டுக்கு மட்டும் என்ன பிரச்சனை?’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.’ எனக்கூறி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘”They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

ஸ்டாலின்

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.’ எனக் கூறியிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play