“என் தொகுதிக்கு வாங்க… ஒரு எம்எல்ஏ என்ன செய்ய முடியும் எனக் காட்டுகிறோம்” – வானதி சீனிவாசன்

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் மலரஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன்,

“27 ஆண்டுகளாக ஏன் இதைத் திரும்பத் திரும்ப மக்களுக்கு நினைவுபடுத்துகிறீர்கள் எனக் கேட்கின்றனர். நம் சமூகத்தைப் பிளக்க நினைக்கும் வரலாற்றை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

வானதி சீனிவாசன்

அதனால் கோவையின் வளர்ச்சி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்லாமல் இருக்க மாட்டோம். பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றுபவர் முதலமைச்சராக இருக்கிறார்.

அவர் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர். பா.ஜ.க-வினர் நாட்டைப் பிரிப்பார்கள், மதக் கலவரம் செய்வார்கள் என்று பேசுகிறார்கள். அரசியலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க மத வாதத்தைக் கையில் எடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

பா.ஜ.க பிரிவினைவாதம் செய்கிறது என்று பேசும் கட்சிகள் என் தொகுதிக்கு வந்து பாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பா.ஜ.க மதக் கலவரத்துக்கான கட்சி அல்ல.

முதலமைச்சர் ஸ்டாலின்

பா.ஜ.க பிரிவினை வாதத்தைத் தூண்டுகிறது என்கிறார்கள். ஆனால் இதை வெளிநாடுகளில் உள்ள யாரும் நம்ப மாட்டார்கள். தமிழகமும் ஒரு நாள் நம் கைக்கு வரும். அதுவரை தொடர்ந்து உழைப்போம்.” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play