Valentine’s Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ – ஏன் தெரியுமா?

`உங்கள் முன்னாள் காதலியின் பெயரை ஓநாய்க்கு வீசப்படும் இரைகளுக்கு நீங்கள் வைப்பீர்களா?’… என்ன கேள்வி இது என்று தோன்றும். ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸில் இருக்கும் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் இவ்வாறு செய்கின்றனர். இதற்கான காரணமும் பின்னணியும் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

காதலர் தினத்தன்று பொதுவாக காதலன், காதலி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். விட்டுச் சென்ற அல்லது முடிந்து போன உறவை கொண்டாடவும் சில வித்தியாசமான வழிகள் உள்ளன.

அப்படி டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோ மிருகக்காட்சிசாலைகள் சரணாலயங்கள் உங்களது முன்னாள் காதலர் அல்லது காதலின் பெயர் கொண்ட உணவுகளை ஓநாய்க்கு வீச அனுமதிக்கிறது. முறிந்து போன உறவுகளின் பெயரை கரப்பான் பூச்சி, எலி அல்லது ஓநாய்க்கு கொடுக்கப்படும் இரைக்கு வைத்து கொடுக்க அனுமதிக்கின்றன. 5 அமெரிக்க டாலர் செலுத்தி இவ்வாறு பெயர் வைத்து விலங்குகளுக்கு உணவு வழங்கலாம்.

நிதி திரட்டும் முயற்சியாக இதனை செய்து வருவதாக காட்டுயிர் சரணாலயத்தின் இணை உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் காதலர் என வரும்போது கோபத்தை வெளி காட்ட அளவே இருக்காது. எனவே அவர்களது பெயரை ஓநாய்களுக்கு தூக்கி எறியும் உணவிற்கு வைத்தால் அவற்றை தூக்கி எறியும்போது விலங்குகளுக்கும் வயிறு நிறையும், மனிதர்களுக்கும் அழுத்தத்தின்/வெறுப்பிம் தாக்கம் குறையும் என்று கூறுகின்றனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play