மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் பெயரில் அலங்கார தோரண வாயில் அமைக்கப்பட்டது. அதற்குப்பின் அங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களுடன் வணிகக் கட்டடங்களும் அதிகரித்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நக்கீரர் தோரண வாயிலை இடிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதற்கு 6 மாதம் அவகாசம் அளித்தது.
ஆனால், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று இரவு தோரண வாயிலை இடிக்கும் பணியை தொடங்கியது. இரண்டு ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்றபோது தோரண வாயில் தூண் திடீரென இடிந்து ஜேசிபி வாகனம் மீது விழுந்ததில் ஒப்பந்தரார் நல்லதம்பியும், டிரைவர் நாகலிங்கமும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
உடனே தீயணைப்பு மீட்புத் துறையினர் வந்து அவர்களை மீட்டதில் டிரைவர் நாகலிங்கம் உரிழந்தது தெரிய வந்தது. படுகாயமடைந்த ஒப்பந்ததாரர் நல்லதம்பி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் நேற்று இரவு முழுவதும் மாட்டுத்தாவணி பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.

மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயிலை அகற்றும் பணியை முன்னறிவிப்பு செய்து, முறையான பாதுகாப்பு வசதிகளுடன் திட்டமிட்டு செய்யாமல் மிகவும் அலட்சியமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளதாக பொதுமக்கள் புகார் எழுப்பி வருகிறார்கள்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play