கோவை: அட்டகாச பட்ஜெட் சுற்றுலா – இயற்கையுடன் வீக்எண்டை செலவிட ஷ்பெஷல் ஸ்பாட்; ஆனால்..!

பரளிக்காடு!

மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிடித்த உணவு வகைகளுடன் ஒரு சுற்றுலா தலம் கோவையில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பரளிக்காடு பற்றி தான் சொல்லபோகிறோம். Baralikaadu ECO Tourism

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால், பரளிக்காடு உங்களை இனிதே வரவேற்கும்.

முதலில் சுக்கு காபி, பில்லூர் அணையில் பரிசல் பயணம், பவானி ஆற்றில் நீராடல், அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் சமைத்த மதிய உணவு, காட்டிற்குள் நடைபயணம் என இயற்கையை மொத்தமாக ஒரு நாளில் ரசிக்கலாம்.

பரளிக்காடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நினைத்தவுடன் இங்கு சென்றுவிட முடியாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்து பணம் செலுத்திய பின்னரே பரளிக்காடு செல்ல முடியும். https://coimbatorewilderness.com/tour-details/baralikadu/

பெரியவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.600, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.500, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இலவசம்.

பரளிக்காடு!

அங்கு பரிசலை இயக்குபவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.

பரளிக்காடு சுற்றுலாத்தலத்தின் சிறப்பு அம்சமே உணவுதான். மலைவாழ் மக்கள் சமைத்துக் கொடுக்கும் 15 வகையான சைவ, அசைவ உணவு வகைகள் உங்களுக்கு இடைக்கும்.