UPSC/TNPSC: போட்டித் தேர்வு பயிற்சி முகாமில் சிறப்புரையாற்றும் திருச்சி எஸ்.பி செல்வநாகரத்தினம் IPS

திருச்சியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2024 – 25 – ம் ஆண்டுக்கான UPSC/TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி? என்கிற இலவச ஆலோசனை முகாம் மற்றும் ஒரு வருட இலவச பயிற்சிக்கான Scholarship Test நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்த இலவச ஆலோசனை முகாமில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தனது அனுபவங்களை உங்கள் முன் வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.

கார்டு

சென்னையைச் சேர்ந்த செல்வநாகரத்தினம் கடந்த 1986, மே – 31- ம் தேதியன்று பிறந்தார். அவருக்கு 10 வயதாக இருந்தபோது தந்தையை இழந்தார். இல்லத்தரசியான அவரின் தாயார், அவரை அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் வளர்த்தார். கஷ்டங்கள் இருந்தபோதிலும், வெற்றிக்கான, லட்சியத்துக்கான வேட்கை துல்லியமாக இருந்தது. செல்வநாகரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான சென்னையில் பயின்றார்.

தொழில்நுட்பம் மற்றும் விமானப் போக்குவரத்து மீதான அவரது ஈர்ப்பு, கோயம்புத்தூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விமானப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற வழிவகுத்தது. அவரது பொறியியல் பின்னணி தான், அவருக்கு பின்னாளில் இந்த காக்கி உடுப்புப் பணியில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் மனநிலையை ஊட்டியது.

தனது கனவுப் படிப்பை முடித்தாலும், தொடர்ந்து அவரது முனைப்பு, எப்படியாவது சிவில் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது தான். அதனால், பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, செல்வநாகரத்தினம் அதற்காகக் கடுமையாக உழைத்தார். நேரம் காலம் பார்க்காமல் அதற்காக கருமமே கண்ணாக இருந்து முனைப்புடன் படித்தார். நம்பிக்கையோடு தேர்வெழுதினார். அதன்காரணமாக, முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 2013 – ம் ஆண்டு தேர்வில் 129-வது இடத்தைப் பிடித்தார். தமிழ்நாட்டில் தனது பணியைத் தொடங்கிய இவர், தமிழ்நாடு காவல் அகாடமியில் (TNPA) பயிற்சிப் பொறுப்பாளராக 1,400-க்கும் மேற்பட்ட துணை ஆய்வாளர்கள் (SI-க்கள்) , 45 துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) பயிற்சியாளர்கள் மற்றும் தமிழ்நாடு கேடரிலிருந்து இரண்டு தொகுதி IPS பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

செல்வநாகரத்தினம்

இந்தப் பணி தான் தனக்குப் பிடித்த, மனதுக்கு மிகவும் நெருக்கமான பணிக்காலமாக இருந்ததாக அவரே தெரிவித்துள்ளார். அப்படி, TNPA-வில் அவர் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்துடன் பணியாற்றியது, உயரதிகாரிகள் மத்தியில் அவருக்கு பாரட்டைப் பெற்றுத் தந்தது. தற்போது, திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வரும் இவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். சைபர் க்ரைம்களை முற்றிலும் தடுக்கவும், போக்சோ குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். தவிர, ரவுடியிஸம், போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றை ஒழிக்கவும் முனைப்பு காட்டி வருகிறார். மக்கள் கொண்டு வரும் பெட்டிஷன்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கவும், குற்றங்களைக் களைய நிறைய பீட்களை அமைக்கவும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவரது நேரடி பார்வையில் உள்ளது மாதிரியான வாட்ஸ் அப் நம்பரைக் கொடுத்து, அதன்மூலம் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தனது கவனத்துக்கு வரும்படி செய்துள்ளார். ’குற்றமில்லாத திருச்சி மாவட்டம்’ என்ற இலக்கோடு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவர் பல தடைகளைத் தாண்டி, பல படிப்பினைகளைப் பெற்று சிவில் தேர்வில் வெற்றி பெற்றது பற்றியும், அந்த நிலையை அடைய அவர் சொல்லும் வெற்றிச் சூத்திரம் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொள்ளுங்கள்.

செல்வநாகரத்தினம்

அதாவது, அவரது மோட்டிவேஷன் உரையைக் கேட்க, கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் ஆனந்த விகடன், இணைந்து திருச்சியில் வரும் 23 – ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடத்தும் UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ள, கீழ்கண்ட இணைப்பை க்ளிக் செய்து, அதில் விண்ணப்பிக்கவும்.