டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார். சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெஜ்ரிவாலைத் தோற்கடித்த பர்வேஷ் வர்மா யார்?
பாஜகவைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன்தான் பர்வேஷ் வர்மா. சாஹிப் சிங் வர்மா 1996 முதல் 1998 வரை டெல்லி முதல்வராக இருந்தார். அவரின் மகனான பர்வேஷ் சர்மா பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவர் இந்து ஜாட் குடும்பத்தை சேர்ந்தவர். 2009ல் மேற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் பாஜக அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

அதன்பிறகு கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை எம்.பியாக இருந்தார். பர்வேஷ் வர்மாவுக்கு டெல்லியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்நிலையில்தான் பர்வேஷ் வர்மா புது டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்கினார். தற்போது கெஜ்ரிவாலைத் தோற்கடித்து வெற்றி வாகையையும் சூடி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs