சென்னை ரியல் எஸ்டேட் துறையில் பெருமைமிகு நிறுவனமாக திகழும் DRA சென்னை நகர மக்களின் வாழ்விடங்களை நவீன முறையில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் மாதவரத்தின் பிரதான இடத்தில் ‘DRA Astra’ என்னும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை துவங்கி உள்ளது.
இங்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2 மற்றும் 3 படுக்கை அறைகளைக் கொண்ட 132 பிளாட்கள் கட்டப்பட உள்ளன. இதன் ஒரு சதுர அடி விலை ரூ.6,599 முதல் துவங்குகிறது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மிகவும் அமைதியான இயற்கையான சுற்றுப்புறத்துடன் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரதான இடத்தில் அமைந்துள்ள ‘DRAAstra, வரவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலும், அதனைச் சுற்றி பள்ளிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என பல்வேறு முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ளது. அதிநவீன வீடுகளை விரும்புபவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் வளர்ந்து வரும் சமூகத்தில் சுறுசுறுப்பான, வளமான வாழ்க்கை முறையை விரும்புபவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
இங்கு உடல் நலம் மற்றும் மன அமைதியை வழங்கும் விதமாக 30க்கும் மேற்பட்ட பிரீமியம் தர வசதிகள் உள்ளன. இயற்கை சூழ்ந்த மூலிகைத் தோட்டம் மற்றும் ஜென் தோட்டத்துடன் நடை பயிற்சிக்கான ரிஃப்ளெக்சாலஜி நடை பாதை மற்றும் யோகா பகுதி என தனித்தனி பகுதிகள் உள்ளன. மேலும் கூடுதலாக, இங்கு விசாலமான திறந்தவெளி ஆம்பிதியேட்டர், கலாச்சார கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அரங்குகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஓய்வு பகுதி, விருந்தினர்கள் மற்றும் உறவினர்களை வரவேற்று உபசரிக்கும் வகையில் பிரத்யேக இடங்கள் மற்றும் பார்பிக்யூ கவுண்டர் என பல்வேறு சிறப்புக்களை கொண்டுள்ளது.
இந்த புதிய திட்டம் குறித்து DRA நிர்வாக இயக்குனர் திரு.Ranjeeth Rathod, கூறுகையில், எங்களிடம் வீடு வாங்குவது என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, அது அவர்களுக்கான பெருமையின் அடையாளம் ஆகும். மாதவரத்தின் மையப்பகுதியில், நவீன ஆடம்பர வசதிகளுடன் அமைய உள்ள இந்த குடியிருப்பு, நல்வாழ்வு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை ஆகியவற்றை இங்கு வீடு வாங்குபவர்களுக்கு வழங்கும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். எங்களிடம் வீடு வாங்குபவர்கள் அவர்கள் தங்கள் குடும்பத்துடன்மகிழ்ச்சியாக வாழவும், அதே சமயம் அதை பெருமையாக கருத வேண்டும் என்பதை மனதில் கொண்டு நாங்கள் எங்களின் ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து வருகிறோம். சென்னையில் நவீன வாழ்க்கை முறைக்கான புதியதொரு மாற்றமாக எங்களின் DRA Astra குடியிருப்பு திட்டம் இருக்கும் என்று என்று தெரிவித்தார்.

DRA Astraசுறுசுறுப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை விரும்புவோருக்கு ‘DRA Astra’ உண்மையிலேயே சிறந்த இடமாக இருக்கும். இங்கு கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் பூஸ்பால் மைதானம் உள்ளிட்ட விளையாட்டு மண்டலங்களும், வெளிப்புற பொழுதுபோக்கைப் பொறுத்தவரை ஏராளமான வசதிகளும் உள்ளன. மேலும் இங்கு ஒரு ஜூம்பா நடன மையம் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான தனிப் பாதை என அனைத்து வசதிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.