மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (ஜனவரி 31) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவிழாக்களின் நகரமான மதுரை உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தெப்பத் திருவிழாவின் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னிதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்குச் சிறப்புப் பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீனாட்சியம்மன் கோயில் அறநிலையத்துறை அலுவலர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர்.
தை தெப்பத்திருவிழா பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன், காலை, மாலை என இருவேளைகளிலும் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பா்.

இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக பி்ப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை ஸ்தாபித்த வரலாற்று லீலையும், 9 ஆம் தேதியன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் விழாவும், 10 ஆம் தேதியன்று கதிரறுப்பு நிகழ்வும், 11 ஆம் தேதியன்று சிகர நிகழ்வான தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
