சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆண்டு முடிவு போனஸாக அதன் ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன்.
ஊழியர்கள் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ அவ்வளவு பணத்தை மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
Henan Mining Crane Co. Ltd என்ற நிறுவனம் ஒரு நீளமான டேபிளில் மொத்தமாக பணத்தை நிரப்பி, 15 நிமிடங்கள் ஊழியர்களுக்கு நேரம் கொடுத்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொட்டிக் கிடக்கும் பணத்தை ஊழியர்கள் கொத்துக்கொத்தாக அள்ளுவதைப் பார்க்க முடிந்தது.

இந்த போனஸ் வழங்களில் ஒரு ஊழியர் அதிகபட்சமாக ஒரு லட்சம் யுவான் பணத்தை அள்ளியதாகக் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 12.07 லட்சம் ரூபாய். மொத்தமாக 70 கோடி ரூபாய் வரை போனஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலவிதமான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது. சிலர் நிறுவனத்தின் தாரளத்தன்மையைப் புகழ்கின்றனர். சிலர் ஊழியர்களின் கண்ணியம் அவமதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமண்டில் தெரிவியுங்கள்!
At #Henan Mine Crane Group’s annual meeting, the boss handed out cash to employees and had them count the money! pic.twitter.com/EsbI399QYk
— China Perspective (@China_Fact) January 26, 2025