Modi -Trump: “நல்ல நண்பர், நம்பகமான பார்ட்னர்ஷிப்” -டிரம்புடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி

கடந்த வாரம், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப். இந்த நிகழ்வில் இந்தியா சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சில இந்திய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

‘இந்தியா அமெரிக்க பொருள்களின் மீது அதிக வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவின் மீது அதிக வரி விதிக்கும்’, ‘அமெரிக்காவில் குடியேறியிருக்கும் சட்டத்திற்கு புறம்பான மக்களை வெளியேற்றுவேன்’ (இதில் குறிப்பிடத்தக்க சதவிகிதம் இந்தியர்கள் ஆவார்கள்’ என டிரம்ப் ஒவ்வொன்றாக கூறிக்கொண்டிருந்த…பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் பிரதமர் மோடி, டிரம்புடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.

நண்பருடன் பேசியதில் மகிழ்ச்சி!
நண்பருடன் பேசியதில் மகிழ்ச்சி!

இதுக்குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி, “என்னுடைய நெருக்கமான நண்பர் டிரம்புடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க அவருடைய இரண்டாவது வெற்றிக்கு வாழ்த்துகள். பரபஸ்பர நன்மைக்காகவும், நம்பகமான பார்ட்னர்ஷிப்பாகவும் நாங்கள் இணைந்திருக்கிறோம். நாங்கள் இருவரும் மக்களின் நலன், உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு இணைந்து பணியாற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.