ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசுகையில், “இந்திய மொழிகளின் தாயாகத் தமிழ் மொழி இருக்கும்போது, வங்க மொழியில் எழுதப்பட்ட பாடலைத்தான் தேசியகீதமாகப் பாடிக்கொண்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு மொழியிலும் நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். ஈழத்தில் இறந்தவர்கள் தமிழர்கள் என்பதால் யாரும் வெகுண்டு எழவில்லை. இதுவே, அங்கு இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இறந்து இருந்தால் தமிழகத்தில் உள்ள திராவிடக் கொள்கையாளர்கள் வெகுண்டு எழுந்து இருப்பார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஈழ மக்களுக்குச் செய்த துரோகத்துக்குக் கணக்கில்லை. மது விற்பனையில் மட்டும் தான் திராவிடக் கட்சிகள் பாஸ்மார்க் வாங்குகின்றன. திராவிட மது கலாசாரம் ஒழிக்க நாம் தமிழர் கட்சியால் மட்டும் தான் முடியும்.
இன்னும் இரண்டு தேர்தலில் வட இந்தியர்கள்தான் தமிழகத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிப்பார்கள். இப்போதே கோவை தெற்குத் தொகுதியில் வட இந்தியர்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இங்குள்ள வரலாறு குறித்து என்ன புரிதல் உள்ளது? டங்ஸ்டன் சுரங்கம் பிரச்னையை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்த பிறகுதான் தி.மு.க-வுக்குப் பயம் வந்தது. இப்போது பரந்தூர் விமான நிலையம் குறித்து நாம் தமிழர் கட்சி பேசுகிறது. இதுபோன்ற கொஞ்சம் காலம் கழித்து தி.மு.க அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லும்.

பெரியார் கருத்துகளைக் கேட்டு நானும் ஏமாந்து விட்டேன். சாராயம் விற்கும் ஒரு இலாகாவை வைத்துக்கொண்டு என்ன திராவிட பெருமை பேசுகிறார்கள். சாராயத்தை நிறுத்தி விட்டால் மாற்றுப் பொருளாதாரத்திற்குத் தமிழக அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? தமிழகத்திற்குப் பால் ஆந்திராவிலிருந்தும் இறைச்சி மற்ற மாநிலத்திலிருந்து வருகின்றன. தமிழகத்தின் தற்சார்புப் பொருளாதாரம் என்ன ஆனது? கார், செல்போன் ஏசி, மிக்ஸி, தொலைக்காட்சி இவை இல்லை என்று எந்த நாட்டிலும் புரட்சி வந்தது இல்லை. ஆனால், நீரும், சோறும் இல்லை என்றால் எந்த நாட்டிலாவது புரட்சி வராமல் இருந்தது உண்டா? இலங்கை பொருளாதாரத்தில் நலிவுற்றபோது அந்நாட்டுப் பிரதமர் தப்பித்து அமெரிக்கா சென்றார். நேற்று இலங்கை, இன்று வங்கதேசம் நாளை நமக்கு வரும் என மக்கள் சிந்தித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs